கற்போம் தமிழ்
மழலைக்கல்வி - Primary Level
தமிழ்ப் பாடங்களைக் கற்கும் ஆர்வத்தைத் தூண்டும் வகையில், படங்கள், காட்சிகள் மற்றும் படக் கதைகள், கவிதைகள் மற்றும் பாடல்கள் மூலம் தமிழ் கற்கும் வகையில் பாடங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன.
அடிப்படை நிலை - Basic Level
எழுத்துகள் அறிமுகம், சொற்களைக் கற்றல், சிறு தொடர் கற்றல், எழுதும் பயிற்சி, மழலைப் பாடல்கள், அறநெறிக் கதைகள் ஆகியப் பாடப்பொருகள் இதில் அடங்கும்.
பாடப்பொருள்
- எழுத்துகள் அறிமுகம்
- சொற்கள் கற்றல்
- சிறுதொடர் கற்றல்
- எழுதும் பயிற்சி
- மழலைப் பாடல்கள்
- அறநெறிக் கதைகள்
இடைநிலை - Intermediate Level
சொல், பொருள், தொடர், இலக்கணம் ஆகிய மொழிக் கூறுகள்- கேட்டுக் கற்றல், படித்துக்கற்றல், பேசிக்கற்றல், எழுதிக்கற்றல் ஆகிய திறன்களை வளர்க்கும் வகையில் கீழ்க்காணும் 20 தலைப்புகளில் பாடங்களாக வடிவமைக்கப்பட்டுள்ளன. அடிப்படைப் பாடங்களின் தொடர்ச்சியாகவும் மேல் நிலைப் பாடங்களுக்கான முன் தகுதியாகவும் இப்பாடங்கள் உருவமைக்கப்பட்டுள்ளன.
பாடப்பொருள்
- உயிரியல் பூங்கா
- சந்தை
- விடுதி
- மஞ்சு விரட்டு
- மணி அறிதல்
- திசைகள்
- என் குடும்பம்
- பாரதியார்
- தஞ்சை பெரிய கோயில்
- பொங்கல் திருநாள்
- விருந்து ஆளுக்கா? ஆடைக்கா?
- சிலப்பதிகாரம்
- கணைக்கால் இரும்பொறை
- மாமல்லபுரம்
- தாத்தாவின் கடிதம்
- மழையின் கதை
- பொய்க்கால் குதிரை
- விருந்தோம்பல்
- ஆதிமந்தி
- பயணம்
மேல்நிலை - Advanced Level
அறிவியல் கட்டுரை, பயணக்கட்டுரை, இலக்கியக் கட்டுரை, கடிதம், நேர்காணல், நாடகம், உரையாடல், சிறுகதை, வருணனை, இதழியல் பயன்பாடு போன்ற உரைநடைத் தமிழ் ; வாழ்த்துப்பாடல், நாட்டுப்புறப்பாடல், அறவுரைப்பாடல், மறுமலர்ச்சிப் பாடல், தொடர்நிலைச் செய்யுள், பல்சுவைப்பாடல் போன்ற கவிதைத் தமிழ் ஆகியவற்றில் திறன்களை வளர்க்கும் வகையில் கீழ்க்காணும் 18 தலைப்புகளில் மேல் நிலைப்பாடங்கள் அமைகின்றன. இதனுள் மொழிப்பயன்பாட்டிற்குத் துணையான மரபியல் இலக்கணப் பாடங்களும் தரப்படுகின்றன. மேல்நிலைப் பாடங்கள்- இடைநிலைப் பாடங்களின் தொடர்ச்சியாகவும், தமிழகப் பள்ளிக் கல்வியின் 6 ஆம் வகுப்பு வரையிலான திறன்களைத் தழுவியனவாகவும் அமைந்துள்ளன.
பாடப்பொருள்
- இறைவாழ்த்து, மொழிவாழ்த்து
- குழந்தைகளும் கல்வியும் (உரையாடல்)
- வருணனை
- நாட்டுப்புறப் பாடல்கள்
- செய்தி
- தீபங்கள்
- எல்லாம் போச்சு
- புத்தரும் ஏழைச் சிறுவனும் (தொடர்நிலைச் செய்யுள் )
- வள்ளுவரின் மெய்ப்பொருள்
- ஒளவை பெற்ற நெல்லிக்கனி
- பல்சுவைப் பாடல்கள்
- அன்னைக்கு
- சதுரங்கச் சாதனையாளர் விஜயலட்சுமியுடன் ஒரு சிறப்பு நேர்காணல்
- அறவுரைப் பகுதி
- சித்தார்த்தன் (நாடகம்)
- ஏனாதிநாதர்
- மறுமலர்ச்சிப் பாடல்கள்
- கணிப்பொறி நினைவகம்
மேற்சான்றிதழ்க் கல்வி
த.இ.க. சான்றிதழ்க் கல்வியின் அடுத்தக்கட்ட வளர்ச்சி மேற்சான்றிதழ்க் கல்வி ஆகும். இஃது தமிழ்நாடு அரசுப் பள்ளிக் கல்விப் பாடத் திறனில் ஏழாம் வகுப்பிலிருந்து பன்னிரண்டாம் வகுப்புவரையான கல்விப் பாடத் திறன்களை உள்ளடக்கியப் பாடத்தொகுப்பு நிலையாகும். இவை,
- HG10 நிலை - 1 (7 & 8 வகுப்புகள்)
- HG20 நிலை - 2 (9 & 10 வகுப்புகள்)
- HG30 நிலை - 3 (11 & 12 வகுப்புகள்)
எனும் மூன்று நிலைகளில் வழங்கும் பாடத்திட்டமாக உருவாக்கப் பெற்றுள்ளன.